Sunday, July 20, 2008

ஏன் இப்படி தோணுது??

எனக்கு சின்ன வயசில் ஸுகூல் ஹொம்வோர்க் செய்யும் போது "வளர்ந்து பெரியவங்களாயிட்டா இந்த தொல்லை எல்லாம் இருக்காதேன்னு" நினைப்பேன்.ஆனா இப்ப பாருங்க,பேசுற ஸுகூல் பிரெண்ட்ஸ் எல்லாரும் திரும்ப அந்த காலம் வராதான்னு பேசிகிட்டு இருக்கோம்.

அடுத்தது கல்லூரி காலம்.அங்கிருக்கும் போது இந்த எண்ணம் பொதுவா எனக்கு செமஸ்டர் எக்ஸாம் அப்ப மட்டும் தான் வரும்.சீக்கிரம் படிச்சு முடிச்சிட்டா இந்த டென்ஷன் இருக்காதேன்னு தோணும்.
இப்போ எதுக்கு இப்படி புலம்பல்னா,கால்ஜ் தொறந்துட்சு,மறுபடியும் காலேஜ் போகவே எனக்கு புடிக்கல:(

காலேஜ் படிச்சு முடிச்சவங்க கிட்ட இப்படி புலம்பினா அவங்க இப்படி சொல்றான்க....
இப்போ "காலேஜ்லேயே இருந்திருக்கலாமோ" அப்டினு தோனுது அப்டின்ரான்க.

ஏன் இப்படி தோணுது??

கோடை காலத்தில் குலிர் காலம் நல்லா இருக்கும், குளிரில் நல்லா தூக்கம் வரும்னு நினைக்கிறோம்.பனிக் காலத்தில் குளிர் தாங்க முடியுதா? னு சலிச்சுகிறொம்.

இந்த எண்ணத்தின் காரணம் என்னன்னு பார்த்தா நமக்கு பிரச்னைகள் ஏற்படுர போது அல்லது கடினமான தருணங்களை கடக்கும் போது நமது மனதில் ஏற்படும் குழப்பங்கள் தான் இந்த எண்ணத்தை தோன செய்தாம்.

சில சமயங்களில் அடுத்தவருடன் ஒப்பிட்டு பார்க்கும் எண்ணமும் வந்துடும். நம்மல விட மத்தவங்க எல்லாம் சந்தொசமா இருக்ர மாதிரி மனசு நினைச்சுட்டு ஏங்குது,ஆனா பிரச்சனை என்பது எல்லார் வாழ்விலும் இருக்கும் என்பதுதன் உண்மை.

என்ன நான் சொல்வது சரி தானே ??????????

5 comments:

Nimal said...

சொல்வது சரிதான்.. !!
எல்லாம் மாற்றங்கள் தான்..>!!

FunScribbler said...

ஸ்வேதா, காலேஜ் ஆரம்பிச்சுவிட்டதுனு நினைக்குறேன். அதுக்கு முன்னாடியே புலம்பலா...ம்ம்ம்.. புரியுது உங்க ஃபீலிங். என்ன செய்ய, கழுதைக்கு வாக்கப்பட்டா, உதைச்சுதானே ஆகனும்!
ஹிஹிஹீ.....

Vijay said...

வாழ்வில் எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சை.
உங்களது நிகழ்காலத்தை வீணாக்காதீர்கள். அவ்வளவு தான்.

Ramya Ramani said...

\\விஜய் said...
வாழ்வில் எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சை.
உங்களது நிகழ்காலத்தை வீணாக்காதீர்கள். அவ்வளவு தான்.
\\

sooperah sollirukkaru parunga vijay..

natkal sella sella nammaloda ekkangalum adigamakittee pogum..thriumba pazhase nalla irukkumnu oru feel varum..

But naan enna solvenna

Dont Brood over the Past
As It had gone Past.
Live in the Present!

Shwetha Robert said...

Hi Gaya3,Nimal,Vijay,Ramya,

thank you one & all for your comments,
will drop in your blogs soon,

miss reading your blogs:((((