Sunday, September 14, 2008

ஹாஸ்டல் வாழ்க்கை.........

கல்லூரி காலத்தில் மறக்கமுடியாத வாழ்க்கை விடுதி வாழ்க்கைதாங்க..!
ஹாஸ்டல் மாணவர்களுக்கு பெற்றோரின் தினசரி நச்சரிப்பு கிடையாது..!
வார்டன் எத்தனைப்பேரைத்தான் பாத்துப்பார்..? எப்படியும் வார்டனுக்கு புதுசுபுதுசுசாக அல்வாகொடுக்கும் டெக்னிக் கண்டுபிடிச்சிட்டே தான் இருப்போம் நாங்க...!

காலேஜ்விட எங்க லேடிஸ் ஹாஸ்டல் லூட்டிஸ்தான் சூப்பரா இருக்கு....ஒருத்திக்கு பர்த்டேனா நைட் 12 மணிக்கு அவ ரூம்ல போய் பாட்டு பாடி, லைட் ஆஃப் பண்ணி அவளுக்கு பெட்ஷீட் போட்டு நல்லா மொத்து மொத்துன்னு அடி[செல்லமாதான்!!] சாத்திட்டு, அப்புறமா கிஃப்ட் கொடுத்து, கேக் சாப்பிட்டு....செம ஜாலியா இருக்கு.

விடுதியில் எப்போதும் சில விசயங்கள் இலவசமாய் காணக்கிடக்கும்.

1. அழுக்கு துணிகள்
2. டேபிள் முழுவதும் புத்தகங்கள் சிடிகள்
3. எப்போதும் பாடிக்கொண்டே இருக்கும் டேப்ரிக்கார்கள்
4. காலை 11 மணி வரை தூங்கும் தூங்கு மூஞ்சிகள்...

6 comments:

Nimal said...

இனிமையான அனுபவங்கள் ;)

new layout looks nice...!

Karthik said...

ஆஹா, இன்னும் கொஞ்சம் நிறைய எழுதியிருக்கலாமே!

//கல்லூரி காலத்தில் மறக்கமுடியாத வாழ்க்கை விடுதி வாழ்க்கைதாங்க..!

:)

முகுந்தன் said...

new template super.

//கல்லூரி காலத்தில் மறக்கமுடியாத வாழ்க்கை விடுதி வாழ்க்கைதாங்க..!
ஹாஸ்டல் மாணவர்களுக்கு பெற்றோரின் தினசரி நச்சரிப்பு கிடையாது..! //


எனக்கு அந்த அனுபவம் இல்லை. ஆனால் விடுதியில் தங்கி இருந்த என் நண்பர்கள் பலர் வீட்டிற்கு போக வேண்டும் என்று ஏங்கி இருக்கிறார்கள் :(

FunScribbler said...

புது layout, புது போஸ்ட்டு, புது அனுபவம்..
ம்ம்.. shwethz கலக்குற!!

Divya said...

ஹாஸ்டல் ஜாலியாயிருக்கா?? எஞ்சாய்!!

Ramya Ramani said...

Hostel Life Wonderful Lifennu solvanga Enjoy Maddi :)