Thursday, December 25, 2008

திரு[மண] குறள்!

இணையத்தில் படித்தவை.......

நகைநாடி ரொக்கமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்!

எண்ணித் துணிக திருமணம்; சிக்கியபின்
தப்பலாம் என்பது தப்பு!

கணவராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் பல்லுடைக்கப்பட்டு!

கட்டிய பொழுதினும் பெரிதுவக்கும் தன்மனைவி
பட்டு வேணாமேனும்போது!

சமைத்தாலும் வடித்தாலும் துவைத்து காயவைத்து
மடித்தலும் வல்லது கணவன்!

அசின் அழகு திரிசா அழகு என்பதம்மக்கள்
திருமணமே ஆகாதவர்!

அஞ்சியஞ்சி மனைவிக்கு அள்ளித்தருபவனுக்கு
மிஞ்சுவது தண்டல் கடனே!

கணவன் மனைவிக்காற்றும் உதவி; டிவியில்
"நம்ம குடும்பம்" பார்க்க விடல்!

மூக்கும் மண்டையும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!

குடியால் குடும்பம் மறப்பவனை தடியால்
அடிப்பதுவே திருத்தும் வழி!

2 comments:

தமிழ் said...

தெய்வமே

Karthik said...

ha..ha.
:)

back with a bang?