விடுதியில் போடுற சாப்பாடு விட,
இரவில் நாங்களே செய்து சாப்பிடும் மேகி நூடுல்ஸ் சூப்பரா இருக்கும்.
8.30 க்கு தொடங்கும் முதல் க்ளாஸ்க்கு போக, 8.20 வரைக்கும் பாத்ரூம் வாசலில் பக்கெட்டோடு லைன்ல நிக்கறப்போ கூட நோ டென்ஷன்::))
எங்க க்ளாஸ் ரூம் ஒரு அழகான பூஞ்சோலை, ஏன்னா அழகு அழகான பூக்களாய் நாங்க பூத்திருக்கிறோமே!
ஆனா பாருங்க, இந்த பூஞ்சோலையில் இருக்கிறப்போவும் நானும் என் ஃப்ரண்ட்ஸும் அடிக்கடி தூங்கிபோய்டுறோம்:((
எக்ஸாமுக்கு முந்தின நாள், நல்லா படிக்கிற பொண்ணு, புரியாத பாடத்தை எல்லாருக்கும் மொத்தமா விளக்கம் கொடுத்து எங்க எல்லாருக்கும் அவ புரிய வைக்கிறப்போ, அவளை பாராட்டிட்டு அடுத்த நொடியே.......அரை ஆண்டு காலம க்ளாஸ் எடுத்தும் இதை புரிய வைக்க முடியலையே உன்னாலேன்னு Professor க்கு சாபமும் கொடுப்போம்.
எக்ஸாம் ஹால்ல கூட 'தேவதை' தேடலை தொடரும் நண்பனை கலாய்த்து விட்டு எக்ஸாம் ஹாலுக்குள்ள போனா, கொஞ்ச நேரம் படிச்சதெல்லாம் மட்டுமில்ல.....LKG ல படிச்ச ABCD கூட மறந்து போச்சு:((
Monday, January 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//LKG ல படிச்ச ABCD கூட மறந்து போச்சு:((//
ஹாஹா..ஐயோ பாவம்!
யதார்த்தமான விஷயங்கள அழகா சொல்லியிருக்கீங்க! வாழ்த்துகள்!
Post a Comment