Monday, October 27, 2008

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே!

தீபாவளி பண்டிக்கைக்கு ஏற்றவாறு திருக்குறளை கிறுக்குறள்ளாக எழுதியதை மங்கையர் மலர் புத்தகத்தில் படித்தேன்! இதோ உங்களுக்காக;

லட்டு ஜிலேபி அனைத்துக்கும் மூலம்
சர்க்கரை என்பது தெளிவு.

நெய்யினால் செய்தஸ்வீட் தீருமே தீராதே
காலையில் செய்த இட்லி.

செய்க அதிரசம் சுவையாக செய்தபின்
பெறுக நிச்சயம் பாராட்டு.

எல்லா ஸ்வீட்டும் ஸ்வீட்டல்ல பல்லில்லார்க்கு
அல்வா மட்டுமே ஸ்வீட்டு.

கைமுறுக்கு சுற்றுவது எளிதன்னு கைமூறுக்கல்லது
அச்சுமுறுக்கு செய்வது நன்று.

சுவையும் மணமும் உடைத்தாயின் அப்பண்டம்
செய்த பயனும் அது.

பண்ணிய பலகாரம் பலவெனினும் சிற்சிலவே
உண்ணாமல் மீந்து விடும்.

நேரமில்லை வேலைமிச்சம் என்பர் தம்வீட்டில்
பலகாரம் செய்யா தவர்.

திரியென்ப ஏனை வத்தியென்ப இவ்விரண்டும்
முக்கியமாம் வெடிக்கும் பட்டாசுக்கு.

வாங்கிய பொழுதின் பெரிதுவக்கும் ராக்கெட்டு
வானில் பறந்திடும் போதே.