Saturday, August 30, 2008

பெண்கள் அழகாய் இருப்பது எப்படி?

பெண்கள் அழகாய் இருப்பது எப்படி?
மேக்கப்பினாலா
இயற்கையாகவா அல்லது
ஆன்களின் அதீத கற்பனை வளத்தினாலா :)

பெண்
இயற்கையினால் கொஞ்சம்
மேக்கப்பினால் கொஞ்சம்
ஆண்களின் அதீத
கற்பனையினால் மிச்சம்
ஆக அவளே பேரழகு!

Saturday, August 23, 2008

கொஞ்சம் சிரிங்க ...ப்ளீஸ்!!

* தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க…?
ஆபீஸ்லியா வீட்டிலியா…?

* தாத்தா.. இனிமே கம்ப்யூட்டர் படிச்சாத்தான் வேலை கிடைக்கும்.
அப்ப நீ படிச்சா கிடைக்காதா?

* ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?
அது வாயில்லா பிராணி சார்…!

* மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.

* படத்தின் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்…
யார்..வில்லனா? கதாநாயகனா?..
தயாரிப்பாளர்..

* ராணி: ஏண்டி உன் காதலரை காட்டறேன்னு சொல்லிட்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வர்ற?
வாணி: நான்தான் சொன்னேனே, என் காதலர் என் மேலே “பைத்தியமா” இருக்கார்னு.

Saturday, August 16, 2008

காதல் ஜோக்ஸ்...

காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு?
காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா?
-------------------

“என் காதலி குற்றால அருவி மாதிரி”
“குளு குளுன்னு இருப்பாளா?”
“இல்லை. தலையிலேயே கொட்டுவா”
---------------------------


ஒருத்தி: 10 வருஷத்துக்கு முன்னே என்னைக் காதலித்துக் கை விட்டவரை இப்பக் கல்யாணம் பண்ணி இருக்கேன்.
மற்றொருத்தி: “என்ன இருந்தாலும் உனக்குப் பழி வாங்குற உணர்ச்சி ஜாஸ்திதான்!”
------------------------


“பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்ன என் காதலியை நம்பி ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாப் போச்சு.”
“ஏன்?”
“பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ கொடுத்துடுனு கடைசியில சொல்லிட்டாள்.”

Thursday, August 14, 2008

கி.பி. 2025-ல் தலைப்புச் செய்திகள்... ஒரு கற்பனை...

2027-ல் காமராசர் ஆட்சி நிச்சயம் அமைப்போம். -
மேற்குத் தஞ்சை முன்னேற்றக் காங்கிரஸ் இணைச் சார்புதவித் தலைவர் [பொறுப்பு] வாசன் சூளுரை..!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 999 ரூபாயைவிட அதிகரிக்க
தற்போதைக்கு வாய்ப்பில்லை.. - பெட்ரோலிய அமைச்சர் "பங்க்" குமார்.

கல்லூரிக் காளை படத்தில் கைக்குழந்தை வேடத்தில் நடிக்கிறார்
காதல் இளவரசன் கமலஹாசன்.. 700 கோடி ரூபாய் செலவில்
தொட்டில் தயாராகிறது.

அடுத்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் ..
பயிற்சியாளர் சுடேகர் நம்பிக்கை.


"செல்வி. செந்தமிழ் அரசியின் சித்தி".. புதிய தொடர்.. கல்லூரி மாணவியாக ராதிகா தோன்றும் திகில் தொடர்.. ஸ்டாலின் டி.வி.யில் தொடங்குகிறது.

பின் லேடன் பாகிஸ்தானில் மறைந்து வாழ்வதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்.

இன்னும் 20 ஆண்டுகளில் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும்
வல்லமையை இந்தியா பெற்றுவிடும்.. இஸ்ரோ தலைவர்
மாதவ ரங்கன் பெருமிதம்.


99 % இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்காவிட்டால் கூட்டணியை
விட்டு பா.ம.க. வெளியேறும்.. முதல்வர் விஜய்காந்துக்கு ராமதாஸ் எச்சரிக்கை.

சூப்பர் ஸ்டார் சிம்பு நடிக்கும் "அஜித்" திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருவது உறுதி. ஏ.வி.எம். சுப்பிரமணியன் அறிவிப்பு.

எதிர் வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு இலவச சாட்டிலைட் ..!
அ.ஆ.இ.ஈ.உ. ஊ. தி.மு.க. தலைவி குஷ்பு வாக்குறுதி.

நாங்கள் இலவசமாக சினிமா தியேட்டர் தருவோம்.. ஸ்டாலின் அதிரடி.

அண்டார்டிகாவில் உள்ள இராமர் பாறையைக் காப்பாற்ற ரத்தம் சிந்தத் தயார்.. ட்ராமா கோவிந்தன் சபதம்.

Tuesday, August 12, 2008

வேலைக்கான நேர்காணலில்...உண்மையைச் சொல்ல முடிந்தால்....

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?

எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?

உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

உங்களுடைய தனித்திறமை என்ன..?

வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.

உங்கள் மிகப்பெரிய பலம்..?

இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

பலவீனம்..?

ஹி..ஹி.. பெண்கள்..!


இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?

அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?

நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?

ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?

நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?

நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.

Sunday, August 10, 2008

MISTAKE...

If a BARBER makes a mistake, it’s a new style……. ……… …..
*********
If a DRIVER makes a mistake, it’s an accident…. ……… ……..
*********
If a DOCTOR makes a mistake, it’s an operation… ……… ……..
*********
If an ENGINEER makes a mistake, it is a new venture….. ……… .
*********
If a POLITICIAN makes a mistake, it is a new law……… ………
*********
If a SCIENTIST makes a mistake, it is a new invention… ……… .
*********
If a TAILOR makes a mistake, it is a new fashion….. ……… ….
*********
If a TEACHER makes a mistake, it is a new theory…… ……… …
*********
If a STUDENT makes a mistake, it is a “MISTAKE” !!!!!!!!!!!! !

Saturday, August 9, 2008

ஸ்டுடண்ட் ஜோக்ஸ்......

டீச்சர்: ஏண்டா லாஸ்ட் செமஸ்டர் அந்த பொண்ணோட சுத்தி கிட்டு இருந்த..
இந்த செமஸ்டர் இன்னொரு பொண்ணோட சுத்துர..என்னடா நினைச்சுட்டு இருக்க மனசுல?

ஸ்டூடண்ட்: மேடம்....சிலபஸ் சேஞ்ட்!!

----------------------

டெஸ்டுக்கும்
குவிஸுக்கும்
என்ன வித்தியாசம்??

டெஸ்ட-ல பதில் தெரிஞ்சா 'பாஸ்'
குவிஸ்-ல பதில் தெரியலனாதான் 'பாஸ்'

---------------------------------------------------


டீச்சர்: திருவள்ளுவர் 1330 குறளையும் 133 'அதிகாரமா' எழுதியிருக்கார்.
ஸ்டூடண்ட்:ஏன் சார், ஒரு குறளை கூட அவர் 'அன்பா' எழுதலியா?