Thursday, August 14, 2008

கி.பி. 2025-ல் தலைப்புச் செய்திகள்... ஒரு கற்பனை...

2027-ல் காமராசர் ஆட்சி நிச்சயம் அமைப்போம். -
மேற்குத் தஞ்சை முன்னேற்றக் காங்கிரஸ் இணைச் சார்புதவித் தலைவர் [பொறுப்பு] வாசன் சூளுரை..!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 999 ரூபாயைவிட அதிகரிக்க
தற்போதைக்கு வாய்ப்பில்லை.. - பெட்ரோலிய அமைச்சர் "பங்க்" குமார்.

கல்லூரிக் காளை படத்தில் கைக்குழந்தை வேடத்தில் நடிக்கிறார்
காதல் இளவரசன் கமலஹாசன்.. 700 கோடி ரூபாய் செலவில்
தொட்டில் தயாராகிறது.

அடுத்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் ..
பயிற்சியாளர் சுடேகர் நம்பிக்கை.


"செல்வி. செந்தமிழ் அரசியின் சித்தி".. புதிய தொடர்.. கல்லூரி மாணவியாக ராதிகா தோன்றும் திகில் தொடர்.. ஸ்டாலின் டி.வி.யில் தொடங்குகிறது.

பின் லேடன் பாகிஸ்தானில் மறைந்து வாழ்வதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்.

இன்னும் 20 ஆண்டுகளில் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும்
வல்லமையை இந்தியா பெற்றுவிடும்.. இஸ்ரோ தலைவர்
மாதவ ரங்கன் பெருமிதம்.


99 % இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்காவிட்டால் கூட்டணியை
விட்டு பா.ம.க. வெளியேறும்.. முதல்வர் விஜய்காந்துக்கு ராமதாஸ் எச்சரிக்கை.

சூப்பர் ஸ்டார் சிம்பு நடிக்கும் "அஜித்" திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருவது உறுதி. ஏ.வி.எம். சுப்பிரமணியன் அறிவிப்பு.

எதிர் வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு இலவச சாட்டிலைட் ..!
அ.ஆ.இ.ஈ.உ. ஊ. தி.மு.க. தலைவி குஷ்பு வாக்குறுதி.

நாங்கள் இலவசமாக சினிமா தியேட்டர் தருவோம்.. ஸ்டாலின் அதிரடி.

அண்டார்டிகாவில் உள்ள இராமர் பாறையைக் காப்பாற்ற ரத்தம் சிந்தத் தயார்.. ட்ராமா கோவிந்தன் சபதம்.

10 comments:

முகுந்தன் said...

//கல்லூரிக் காளை படத்தில் கைக்குழந்தை வேடத்தில் நடிக்கிறார்
காதல் இளவரசன் கமலஹாசன்.. 700 கோடி ரூபாய் செலவில் தொட்டில் தயாராகிறது.
//

அப்படி போடுங்க அருவாள ...

கூடவே இதையும் சேத்துக்கோங்க

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயின் மகளை நடிக்க வைக்க டைரக்டர் ஷங்கரின் மகன் முயற்சி......

Nimal said...

சூப்பர்...

//எதிர் வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு இலவச சாட்டிலைட் ..!
அ.ஆ.இ.ஈ.உ. ஊ. தி.மு.க. தலைவி குஷ்பு வாக்குறுதி.

நாங்கள் இலவசமாக சினிமா தியேட்டர் தருவோம்.. ஸ்டாலின் அதிரடி.//

me falling-falling-laughing :))

FunScribbler said...

//செல்வி. செந்தமிழ் அரசியின் சித்தி".. புதிய தொடர்.. கல்லூரி மாணவியாக ராதிகா தோன்றும் திகில் தொடர்.. ஸ்டாலின் டி.வி.யில் தொடங்குகிறது.//

பின்னிட்டேள், பிச்சிட்டேள்! கலக்குங்கோ!

Divya said...

சிரிக்க வைத்தது பதிவு:)

சூப்பரு ஷ்வேதா, தொடரட்டும்:))

J J Reegan said...

// 2027-ல் காமராசர் ஆட்சி நிச்சயம் அமைப்போம். -
மேற்குத் தஞ்சை முன்னேற்றக் காங்கிரஸ் இணைச் சார்புதவித் தலைவர் [பொறுப்பு] வாசன் சூளுரை..! //

இந்த (பொறுப்பு) தாங்க தாங்க முடியல...
இதை அவர் பார்க்காம இருக்குறது நல்லது.....

J J Reegan said...

//99 % இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்காவிட்டால் கூட்டணியை
விட்டு பா.ம.க. வெளியேறும்.. முதல்வர் விஜய்காந்துக்கு ராமதாஸ் எச்சரிக்கை. //

அப்பவும் கூட்டணியில்தான் இருக்குமோ....

J J Reegan said...

// சூப்பர் ஸ்டார் சிம்பு நடிக்கும் "அஜித்" திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருவது உறுதி. ஏ.வி.எம். சுப்பிரமணியன் அறிவிப்பு. //

ஆஹா என்ன திங்கிங்....

priyamudanprabu said...

கல்லூரிக் காளை படத்தில் கைக்குழந்தை வேடத்தில் நடிக்கிறார்
காதல் இளவரசன் கமலஹாசன்.. 700 கோடி ரூபாய் செலவில் தொட்டில் தயாராகிறது.
//

எதிர் வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு இலவச சாட்டிலைட் ..!
அ.ஆ.இ.ஈ.உ. ஊ. தி.மு.க. தலைவி குஷ்பு வாக்குறுதி./
//////////


சூப்பரப்பூ

Unknown said...

Interviewer tell me abt urself கேக்கும்போது
"சிவாஜி ரஜினி மாதிரி எத்தன பேருடா இதே கேள்விய கேப்பீங்க"
நு தோணும்... :(((
அப்பறம் மூஞ்சிய சாதுவா வெச்சுகிட்டு உளறி கொட்டி....என்னமோ போங்க கடசில எப்படியோ போட்டி தட்ட ஒக்காந்தாச்சு...ஸ்ஸ்ஸ்ஸ் அபா இப்பவே கண்ணா கட்டுதே!!!!!!

Unknown said...

இப்போதான் சாப்ட்டு வந்தேனா தூக்ககலக்கம் அதான் கமென்ட் மாத்தி போட்டுட்டேன் :)))