Sunday, June 22, 2008

இது இல்லாத தமிழ் சினிமா இருக்கா..?

*1) போலிஸ் படத்துக்கு இடையிலே வரணும்ன்னா..


* ஹீரோ போலிஸ்-ஆ இருக்கணும்..


* ஹீரோயின் அப்பா போலிஸ்-ஆ இருக்கணும்..


* இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்..
____________________________________________________________________


2) ரெண்டு கதாநாயகி இருந்தா...


* ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும்..


* வெளிநாட்டுக்கு போயிடணும்..


* இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்.
_________________________________________________________________


3) ஹீரோ ரெட்டை வேடமா இருந்தா...


* ரெண்டு பேரும் அடிச்சுக்கற மாதிரி சண்டை காட்சி இருக்கணும்..


* ரெண்டு பேரும் கடைசியிலே வில்லனை வெளுக்கணும்..


* இல்லேன்னா அதிலே ஒருத்தன் புண்ணாக்கா இருக்கணும்..

--------------------------------------------------------------
*
*4) ஹீரோவுக்கு தங்கச்சி இருந்தா...


* படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும்..


* வில்லனை தான் லவ் பண்ணனும்..


* எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க அப்படின்னு
கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்.
________________________________________________________________


5) காமெடியன்னு ஒருத்தன் இருந்தா...


* அடி வாங்கணும்..


* அடி கொடுக்கணும்..


* இல்லேன்னா தத்துவமோ, மூடனம்பிக்கை ஒழிப்பு பிரசாரமோ செய்யணும்..
____________________________________________________________________


6) ஹீரோவோ ஹீரோயினோ போலிஸ்-ஆ இருந்தா..


* கையிலே பிரம்பு வச்சிருக்கணும்..


* போஸ்டருக்கு போஸ் குடுக்கும் போது நம்ப கண்ண குத்தறது மாதிரி நீட்டி
காட்டணும்..


* கட்டாயம் காமெடி பார்ட்டி ஏட்டாவோ கான்ஸ்டபிளாவோ இருக்கணும்.*
_____________________________________________________________________

*7) கதாநாயகனோ, கியோ வக்கீலா இருந்தா...


* யுவர் ஆனர்.. அப்ஜெக்சன் னு சொன்னா நீதிபதி ஏத்துக்கணும்..


* எதிர் வக்கீல் மரண பாயிண்ட் சொன்னா கூட தள்ளுபடி செஞ்சுடணும்..


* இல்லேன்னா கோர்ட்லே முள்ளு உடஞ்ச கடிகாரம் இருக்கணும்.
____________________________________________________________________


8) கதாநாயகன் குள்ளமா இருந்தா..


* கூட ந்டிக்கிற கதாநாயகி உயரமா இருக்கணும்..


* ஹை ஹீல்ஸ் போட்டுக்கணும்..


* ஆனா பாட்டு சீன் பூரா முழங்கால் மடக்கிக்கிட்டே ஆடணும்.
_____________________________________________________________________


9) கதாநாயகன் காலேஜ் மாணவனா இருந்தா..


* ப்ரின்சியோ, லெக்சரரோ காமெடியனாத்தான் இருக்கணும்..


* சக மாண்வர்களா ரெண்டு மூணு குட்டி காமெடியன்களும், வில்லனும் இருக்கணும்..


* கட்டாயம் கதாநாயகியை ராகிங் பண்ற மாதிரி பாட்டு இருக்கணும்.*

__________________________________________________________________________

*10) கதாநாயகி பணக்காரியா இருந்தா..


* திமிர் பிடிச்சவளா இருக்கணும்..


* புடவையை தவிர மத்த எல்லா ட்ரெஸ்ஸும் போடணும்..


* கடைசியிலே ஹீரோ கால்லே விழுந்து மன்னிப்பு கேட்கணும்..*

7 comments:

Nimal said...

சூப்பரு...!!!

//போலிஸ் படத்துக்கு இடையிலே வரணும்ன்னா.. //
தியேடர்ல கலாட்டா நடக்கணும்.

//ஹீரோ ரெட்டை வேடமா இருந்தா... //
ஒருத்தருக்கு மட்டும் முகத்தில மச்சம் இருக்கும்.

//ஹீரோவோ ஹீரோயினோ போலிஸ்-ஆ இருந்தா.. //
போலிஸ் நல்லவங்க, இல்லாட்டி கெட்டவங்க!!

//இல்லேன்னா கோர்ட்லே முள்ளு உடஞ்ச கடிகாரம் இருக்கணும். //
ஏன்??

Vijay said...

Statistical Analysis எல்லாம் போட்டு தக்குறீயளே!!

முகுந்தன் said...

கொன்னுட்டீங்க...

gils said...

enga..2000kaprum neenga padamay paakalaya :D jus kidding..yeah..ithelam ilama tamil cinema iruka mudiyuma..ana ipo rencenta vantha padathulalam itha change panikitrukanga..

FunScribbler said...

இது இல்லாம தமிழ் சினிமா எப்படி எடுக்குறது? ஹிஹிஹி... வாழ்க தமிழ் சினிமா!!

Day 2day Life said...

you have some knowledge about cine. ....

openning nalla than iruku !! Ahna finidhing sari illiyeppa!!

J J Reegan said...

// ஹீரோவுக்கு தங்கச்சி இருந்தா...


* படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும்..


* வில்லனை தான் லவ் பண்ணனும்..


* எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க அப்படின்னு
கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்.

//


இதுதாங்க ஸூஊஊப்ப்ப்பெர்ர்ர்..